• May 08 2024

பருத்தி வீரனில் நடிச்சதால எனக்கு ஒன்றுமே கிடைக்கல- முதல் முறையாக மனம் திறந்து பேசிய நடிகர் சரவணன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சிறுவயதில் இருந்து நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தினால்  1990 களில் திரைப்படத்தில் நடிக்க தொடங்கியிருந்த சரவணன், "பொண்டாட்டி ராஜ்ஜியம்", "தாய் மனசு" உள்ளிட்ட ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

தொடர்ந்து சில ஆண்டுகள் படத்தில் தலை காட்டமல் இருந்த இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருந்த பருத்தி வீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த திரை உலகையும் திரும்பி பார்க்கவும் வைத்திருந்தது.


இந்த திரைப்படத்தில் கார்த்தியின் சித்தப்பா கதாபாத்திரத்தில் வரும் சரவணன் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டிருந்தது. அவரைக் காணும் பலரும் கூட இப்போது வரை "சித்தப்பு" என்றுதான் அழைத்தும் வருகின்றனர். அந்த அளவுக்கு சரவணனின் கதாபாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. பருத்திவீரன் ஹிட்டுக்கு பிறகு நிறைய படங்களில் சரவணன் தோன்றி இருந்தாலும், அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

மேலும் கமல்ஹாசன் தொகுத்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் சரவணன் களமிறங்கி இருந்தார். தொடர்ந்து, விஜய் டிவியில் புதிதாக ஆரம்பித்த மகாநதி என்னும் சீரியலிலும் நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் நடிகர் சரவணன் தற்போது பிரபல பிரத்தேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னுடைய சினிமா பயணங்கள் குறித்தும், தான் நடித்த கதாபாத்திரங்கள் குறித்தும் பேசி இருந்தார்.

அப்போது பருத்திவீரன் ஹிட் எப்படி உங்களை மாற்றி இருந்தது என்ற கேள்விக்கு பதிலளித்த சரவணன், "எனக்கு சந்தோஷமும் தரவில்லை, எதையுமே தரல. வாழ்க்கையும் தரல, பணமும் தரல. பருத்திவீரன் வந்து ஜனங்களுக்கு தான் சந்தோஷம் கொடுத்தது. எனக்கெல்லாம் ஒண்ணுமே நடக்கல. அதுக்கப்புறம் இதே மாதிரி நிறைய படங்கள் வந்துச்சு, நான் நடிக்கல. 17 வருஷமா வீட்ல சும்மா தான் இருக்கேன். எனக்கு நல்ல படம் வந்தா பண்ணுவேன்.நல்ல கதை இருந்தா பண்ணுவேன்.எனக்கு நடிக்க தெரியும் சின்ன வயசுல எட்டாவது படிக்கிறப்ப நான் நடிகன் ஆகணும்ன்னு முடிவு பண்ணினேன். திடீர்னு எதிர்பாராமல் நான் நடிகன் ஆகல. நடிகர் ஆகணும்ன்னு தான் பிறந்து வளர்ந்தேன். எனக்கு அறிவு வந்த நாள்ல இருந்தே நடிகன் ஆகணும்ன்னு தான் ஆசைப்பட்டேன். எனக்குன்னு ஒரு இடம் இருக்கும். அது எப்போ வரும், எங்க இருக்குங்குறது எனக்கு ஓரளவுக்கு தெரியும். அதனால் நான் காத்திருப்பேன். இத்தனை நாள் காத்திருந்தேன்ல" என பதில் தெரிவித்தார்.




Advertisement

Advertisement

Advertisement