• Apr 27 2024

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகும் ஆதி திரைப்படத்தின் கதை இது தானா?- திடீரென லீக்கான தகவல்

stella / 10 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்பொழுது நடிகராக வலம் வருபவர் தான் ஹிப் ஹாப் ஆதி. இவரது நடிப்பில் இறுதியாக அன்பறிவு என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனை அடுத்து தற்பொழுது வீரன் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தில் ஆதியுடன் இணைந்து வினய், முனிஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவணன் தான் இப்படத்தை இயக்கியுள்ளார்.இப்படம் வருகிற ஜூன் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.


ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் கதை குறித்து தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.கதைப்படி, வீரனூர் எனும் கிராமத்தில் வசித்து வரும் 15 வயதாகும் கதாநாயகன் ஆதி திடீரென மின்னலால் தாக்கப்பட்டு கோமாவிற்கு சென்றுவிடுகிறார். 


பின் அதிலிருந்து குணமடையும் ஆதியை அவருடைய அக்கா சிங்கப்பூருக்கு அழைத்து சென்றுவிடுகிறார்.அதற்கு பிறகு தன்னக்குள் மின்னல் ஷக்தி வந்ததை ஆதி உணருகிறார். இதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதைக்களமாககொண்ட திரைப்படம் கணடிப்பாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடிக்கும் என்று கூறப்படுவதையும் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement