• May 19 2024

கமலின் 233வது படத்தின் கதை இது தானா?- எச். வினோத்துடன் சேர்ந்து கதையை எழுதியது யார் தெரியுமா?

stella / 10 months ago

Advertisement

Listen News!


விக்ரம் படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தவிர பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார் கமல்.

மணிரத்னம் கூட்டணி 33 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இணையவுள்ளனர். கமலின் 234வது படமாக இது உருவாகவுள்ளது . அடுத்தடுத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து வந்த உலகநாயகன், நேற்றும் ஒரு அதிரடி அப்டேட்டை வெளியிட்டார். அதில் கமலின் 233வது படத்தை H வினோத் இயக்குவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.


 KH 233 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோ ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது. கையில் தீப்பந்தத்துடன் Rise To Rule என்ற கேப்ஷனுடன் மிரட்டலாக மாஸ் காட்டினார் உலக நாயகன். இதில் முக்கியமாக Rise To Rule என்ற கேப்ஷனும், கமல் கையில் இருக்கும் தீப்பந்தமும் குறியீடாக என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 முன்னதாக இந்தப் படம் விவசாயத்தை பின்னணியாக வைத்து உருவாகவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது Rise To Rule என்ற கேப்ஷன், ப்ரோமோ வீடியோ அனைத்துமே கமலின் அரசியல் அதிரடியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் கதையை கமல்ஹாசனும் H வினோத்தும் இணைந்து எழுதியுள்ளார்களாம். 


இதனால் KH 233 திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸின் 52வது படமாக உருவாகும் KH 233 படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் முக்கியமான கேரக்டரில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் விஜய் சேதுபதி தான் ஹீரோ என்றும், கமல் கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது இதில் கமல்ஹாசன் தான் ஹீரோ என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், KH 233 படத்தின் ஓடிடி ரைட்ஸ் பிஸினஸ் பல கோடிகளில் நடந்து முடிந்துள்ளதாம்.


Advertisement

Advertisement