• May 08 2024

'லியோ'வில் பிக்பாஸ் ஜனனியின் கதாபாத்திரம் இதுதானா... விஜய்யின் மகளா..? அல்லது தங்கையா..?

Prema / 11 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது 'லியோ' திரைப்படம் தயாராகி வருகின்றது. மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் - லோகேஷ் கூட்டணி இணைந்திருப்பதாலும், விக்ரம் படத்தின் உடைய வசூல் சாதனைக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. 


இப்படத்தில் பெரிய திரைப் பிரபலங்கள் மட்டுமின்றி சின்னத்திரை பிரபலங்களும் நடிக்கின்றனர். அந்தவகையில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்துகொண்ட இலங்கைப் பெண் ஜனனியும் லியோ படத்தில் நடிப்பதாக ஏற்கெனவே ஒரு தகவல் வெளியாகி இருந்தது.

இதனை உறுதி செய்யும் விதத்தில் படப்பிடிப்பை முடித்த தகவலை சமீபத்தில் ஜனனி பகிர்ந்து, விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவரின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.


அந்தவகையில் லியோவில் விஜய்யின் ஜோடியாக த்ரிஷா நடித்து வருவதால், அவருடைய மகளாக பிக்பாஸ் ஜனனி நடித்துள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் படக்குழு தரப்பில் இருந்து இது குறித்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

அதாவது லியோ படத்தில் நடிப்பவர்களின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியானால் படத்தின் சுவாரஸ்யம் குறைந்து விடும் என்பதால் மிகவும் ரகசியமாக அதை வைத்துள்ளனர். ஆகவே ஜனனி லியோவில் நடிகர் விஜயின் மகளாக தான் நடிக்கின்றாரா என்பதை உறுதியாக கூற முடியாது எனவும் ஒரு சிலர் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement