• May 29 2023

ரச்சிதா கர்ப்பம் ஆகாததற்கு காரணம் இதுதானா..? அட பாவமே இப்படி ஒரு பிரச்சினையா..?

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் ஹிட்டான தொடர்களில் ஒன்று சரவணன்-மீனாட்சி.மேலும்  இதில் முதலில் செந்தில்-ஸ்ரீஜா நடிக்க செம ஹிட்டடிக்க அதே பெயரில் அடுத்தடுத்த சீசன்கள் வந்தன. அப்படி வந்த தொடர் மூலம் பிரபலம் ஆனவர் தான் நடிகை ரச்சிதா. 


இதனையடுத்து பிக்பாஸ்  6-ஆவது சீசனிலும் கலந்துகொண்டு கலக்கி இருக்கின்றார். அதுமட்டுமல்லாது வெள்ளித்திரையில் இருக்கும் ஹீரோயின்களுக்கு நிகராக அதிக ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருக்கின்றார்.

இந்நிலையில் சமீபகாலமாக ரச்சிதா தனது கணவர் தினேஷ் என்பவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விவாகரத்து செய்ய போவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. அத்தோடு ரச்சிதா சீரியல் இயக்குநர் ஒருவரை காதலித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.


அந்தவகையில் ரச்சிதா திருமணம் செய்து கொண்ட பிறகு தன் கணவர் தினேஷ் உடன் சில கருத்து வேறுபாடு எழுந்து வந்திருக்கின்றது. மேலும் ரச்சிதாவிற்கு உடல்நிலை பிரச்சனையால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லையாம். இதன் காரணமாகவும் ரச்சிதா தினேஷ் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.


தற்போது இந்த விஷயத்தால் இருவரும் நிரந்தரமாக விவாகரத்து செய்ய போவதாகவும் சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்தத் தகவலானது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement