• Sep 13 2024

சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பின்தள்ளிப் போனதற்கு இது தான் காரணமா?- உண்மையை உடைத்த பிரபலம்

stella / 11 months ago

Advertisement

Listen News!


18 ஆண்டுகள் கழித்து இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சந்திரமுகி 2. இப்படத்தில்  ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட ஏராளமான நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளனர்.இப்படத்திற்கான வேலைகள்  ஓராண்டிற்கும் மேலாக நடைபெற்று வந்தது.

 படத்தில் சிஜி எஃபெக்ட்ஸ் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அப்போது படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் சிஜி எஃபெக்ட்ஸ் பணிகள் முடிவடையாததால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு செப்டம்பர் 28ந் தேதி படம் வெளியாக உள்ளது.


இதையடுத்து, சந்திரமுகி 2 படத்தின் 2வது ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. அதில்,17 வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்டு பொண்ணு கங்கா, தன்னைத் தானே சந்திரமுகியா நெனைச்சுட்டு அந்த ஆட்டம் ஆடுச்சு. இப்போ ஒரிஜினல் பீஸே வந்து இறங்கியிருக்கு. என்ன ஆட்டம் ஆடப்போகுதோ... என்ற வடிவேலு வசனத்துடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. 

பேய் பங்களா செட் அப் தொடர்ந்து வரும் வடிவேலுவின் சிரிக்க வைக்காத காமெடி, வேட்டையன்' இன்ட்ரோ, சண்டைக் காட்சி, திகிலுக்கான முயற்சி என பார்த்துப் பழகிய காட்சிகள் தான் இடம்பெற்று இருந்தன. இந்நிலையில், சந்திமுகி2 படத்தின் வெளியீட்டு தேதி செப்டம்பர்15ல் இருந்து 28ம் தேதிக்கு தள்ளிப்போனதற்கான காரணம் குறித்து பி.வாசு வெளிப்படையாக பேசி உள்ளார். 


அதில் படத்தின் ஃபைனல் காப்பியை பார்த்தேன், அப்போது, அதில் இருந்த 480 ஷாட்கள் காணவில்லை, கிட்டத்தட்ட 5 நாட்கள் தீவிரமாக தேடி பின் அந்த காட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான், சந்திரமுகி 2 படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகாததற்கு காரணம் என இயக்குநர் பி வாசு விளக்கம் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement