• Apr 26 2024

சிவகார்த்திகேயனோடு நடிக்க அதிதி சங்கருக்கு இப்படி தான் வாய்ப்பு கிடைத்ததா?.. உண்மையை போட்டுடைத்த பயில்வான்..!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

பிரம்மாண்ட இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தில் நடித்தது மட்டுமின்றி அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மதுர வீரன்’ என்ற பாடலை பாடி பட்டித்தொட்டி எங்கும் பேமஸ் ஆனார்.

ஆனால் இந்த பாடலை முதலில் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி தான் பாடியதாகவும், ஆனால் யுவன் சங்கர் ராஜா யாரோ ஒருவரின் வற்புறுத்தலின் காரணமாக ராஜலட்சுமி பாடலை நீக்கிவிட்டு, அதிதி சங்கரை பாட வைத்தார். இது அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

 திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தும் அதன்பின் சினிமா பத்திரிக்கையாளராகவும் இருக்க கூடிய பயில்வான் ரங்கநாதன் சினிமா குறித்தும் திரையுலக நடிகர் நடிகைகளை குறிக்கும் பல அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அதிதி சங்கரும் சிவகார்த்திகேயனும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் தான் மாவீரன் படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது என்று தெரிவித்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

அது மட்டுமல்ல அதிதி சங்கர் ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் நடிக்க மாட்டேன் என சொன்னதையும் வைத்து பார்க்கும் போது, சொன்னது உண்மையாக இருக்குமோ என்றும் சிலர் நம்புகின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement