• Sep 30 2023

இவங்க தான் சந்திரமுகியா? என்ன கொடுமை சரவணா? கங்கனா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் சந்திரமுகி 2 பிரம்மாண்டமாக லைகா தயாரிப்பில் உருவாகி உள்ளது.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் உருவாகி உள்ள சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடித்துள்ளார். அவரது அழகான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ள நிலையில், ஜோதிகாவின் சந்திரமுகி லுக்குடன் கங்கனாவின் சந்திரமுகி லுக்கை ரசிகர்கள் கம்பேர் செய்து வருகின்றனர்.

 ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் கங்காவாக நடித்த ஜோதிகா தன்னை சந்திரமுகியாக கற்பனை செய்துக் கொள்வார். ஆனால், இந்த படத்தில் சந்திரமுகியாக கங்கனா ரனாவத் கண்டிப்பாக கலக்குவார் என தெரிகிறது. தலைவி படத்திற்கு பிறகு மீண்டும் தமிழில் கங்கனா ரனாவத் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி விநாயகர் சதுர்த்திக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக சந்திரமுகி 2வை மாற்றுவார். அவரது லுக்கில் அப்படியே ராயல் கலை தெரிகிறது என கங்கனா ரசிகர்கள் சந்திரமுகி 2 லுக்கை கொண்டாடி வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க...இவங்க தான் சந்திரமுகியா? என்ன கொடுமை சரவணன் என சந்திரமுகி வசனத்தை வைத்தே ஏகப்பட்ட மீம்களை நெட்டிசன்கள் பறக்கவிட்டு வருகின்றனர். சந்திரமுகினா அது ஜோதிகா தான். கங்கனா ரனாவத் கால் தூசுக்கு கூட வரல, கண்டிப்பா இந்த படம் ஓடுவது கஷ்டம் தான். ஏற்கனவே வேட்டையன் லுக்கில் ராகவா லாரன்ஸை ஜீரணிக்க முடியல, இப்போ இது வேறயா என ட்ரோல்கள் இணையத்தில் தெறிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement