• May 18 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இந்த பிரபலமா?- கடைசி நேரத்தில் யாரும் எதிர்பாராமல் நடந்த டுவிஸ்ட்

stella / 7 months ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. தமிழில் இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த வாரம் கோலாகமலாக தொடங்கப்பட்டது.

 பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இரண்டு வீடுகளுடன் வித்தியாசமான விதிமுறைகளுடன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே கேப்டனை கவராத போட்டியாளர்கள் என நிக்சன், பவா செல்லதுரை, வினுஷா, ஐஷூ, அனன்யா, ரவீனா ஆகிய 6 பேர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் விதிகளை மீறிய காரணத்தால் விசித்ரா மற்றும் யுகேந்திரன் ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்றனர்.


இப்படியான நிலையில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கிடையில் அடிக்கடிமோதலும் நடந்து வருகின்றது. இப்படியான நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு அனன்யா ராவ் வெளியேறுவர் என்று கூறப்பட்ட நிலையில், நடிகர் யுகேந்திரன் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளதாக சில தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement