• Sep 21 2024

விக்ரம் பட டைட்டில் சாங்கை உணர்ச்சி பூர்வமாக பாடியவர் லோகேஷின் ஸ்கூல் சீனியரா?- அட இது நல்லா இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த ஜுன் மாதம் 3ம் திகதி பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகிய படம் தான் விக்ரம். இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசனும் அவருடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் சிறப்புத் தோற்றத்தில் சூர்யாவும் நடித்திருந்தனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இத் திரைப்படம் தொர்ந்து வசூல் சாதனை நடத்தி வருகின்றது. விக்ரம் படம் ரிலீசாகி 20 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. இருப்பினும் இப்படத்தை பார்த்து விட்டு உணர்ச்சி பெருக்குடன் வந்து ரசிகர்கள் தங்களின் கமெண்ட்களை கொடுப்பது கொஞ்சமும் குறையாமல் உள்ளது.

சமீபத்தில் விக்ரம் படம் பார்த்து விட்ட வந்த ஒருவர், விக்ரம் டைட்டில் சாங்கை உணர்ச்சி பூர்வமாக பாடி, படம் மரண மாஸ் என கமெண்ட் கொடுத்து விட்டு சென்றார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் செம வைரலானது. இந்த வீடியோவை சமீபத்தில் பேட்டி ஒன்றின் போது டைரக்டர் லோகேஷ் கனகராஜிற்கு போட்டு காண்பிக்கப்பட்டது.

ஆனால் அந்த வீடியோவை பார்த்த லோகேஷ் கூலாக, ஆமாம். நானும் பார்த்தேன். அவர் என்னுடைய சீனியர் தான். ஸ்கூல் படிக்கும் போது ஹாஸ்டலில் தங்கி இருந்தார். 10 ம் வகுப்பு படிக்கும் போது பார்த்தது. அதற்கு பிறகு இப்போது தான் பார்க்கிறேன் என்றார். இதை கேட்டு பேட்டி எடுக்க வந்தவர் மட்டுமல்ல, லோகேஷ் பேட்டி வீடியோவை பார்த்தவர்களும் ஷாக்காகி விட்டனர்.

ஸ்கூல் சீனியரை கூட இன்னமும் ஞாபகம் வைத்து சொல்கிறாரே என்ற ஆச்சரியம் ஒரு பக்கம் இருந்தாலும், தனக்கு தெரிந்த ஒருவர் தனது படத்தை பார்த்து விட்டு இப்படி உணர்ச்சிவசப்பட்டு பாராட்டுகிறார். ஆனால் மொத்தமே இவரோட ரியாக்ஷன் இவ்வளவு தானா. இவ்வளவுடு கூலாக அது என்னுடைய சீனியர் என்கிறாரே என்று சொல்கிறாரே என கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement