• Sep 13 2024

பாலா தனது மனைவியை பிரிய காரணமானவர் இவரா?.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கரடு முரடான கதைக்களத்தை கொண்ட படங்களை எடுப்பதில் கெட்டிக்காரர்தான் இயக்குநர் பாலா. இவர் சமீபத்தில் திடீரென்று தன்னுடைய மனைவி முத்து மலரை விவாகரத்து செய்துவிட்டார். ஆனால் அதற்கான காரணம் என்ன என்பது தெரியாமல் இருந்த நிலையில், சிவகங்கை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பேட்டியின் மூலம் பாலாவின் விவாகரத்துக்கான காரணமும் தெரியவந்துள்ளது.

அதாவது தேனி சுற்று வட்டாரத்தை கைக்குள் வைத்திருப்பவர்கள் தான் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அவருடைய மகன் ரவீந்திரநாத் எம் பி. இப்போது ஓபி ரவீந்திரநாத் தன்னை அந்தரங்க டார்ச்சர் செய்வதாக விவாகரத்து ஆன காயத்ரி தேவி என்ற பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் அவர் அளிக்கும் பேட்டியில் மூலம் பல அதிர்ச்சியான தகவல்களை புட்டு புட்டு வைத்து கொண்டிருக்கிறார்.

இவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். அதனால் ஓபிஎஸ் மகன் என்னை போதையில் வீடியோ கால் வர சொல்லி தவறாக பேசுகிறார் என்று கூறி இருக்கிறார். இவர் மட்டுமல்ல இவருடைய உதவியாளரிடம் தொலைபேசியை கொடுத்து, ‘எம்பி படுக்க வர சொன்னா உன்னால முடியாதா?’ என்றும் கொலை மிரட்டல் விடுகின்றனராம்.

இது பற்றி ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தியிடம் சொன்னபோது, அவர் எந்த அதிர்ச்சியும் அடையாமல் நிறைய பெண்களுடன் தன்னுடைய கணவருக்கு தொடர்பு இருப்பதாக சுத்தமாகவே கண்டு கொள்ளவில்லையாம். ஆனால் நான், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அண்ணன் என்று தான் கூறுவேன் அவர் என்னை தங்கை என்று தான் கூறுவார். விவாகரத்து ஆனதும் என்னை பயன்படுத்த முயற்சி செய்கிறார்.

இவர் என்னை மட்டுமல்ல நிறைய விவாகரத்து ஆன பெண்களை குறி வைத்து, தன் பண பலத்தையும் பதவி அனைத்தையும் காமித்து ஏமாற்றி வருகிறார். இது எல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் பாலாவின் மனைவியிடம் கள்ள தொடர்பு வைத்திருந்தார். அதனால் தான் பாலா மனம் வெறுத்து போய் விவாகரத்து செய்தார், அதற்கும் இவர் தான் காரணம் என்று கூறிவிட்டார்.

சுமார் 6 வருடங்களாக ஓபி ரவீந்திரநாத்தும் பாலாவின் மனைவி முத்து மலருக்கும் கள்ளத்தொடர்பு இருந்திருக்கிறது. ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தியின் தோழி தான் முத்து மலர். அதன் மூலம்தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது என்றும் காயத்ரி தேவி தற்போது அளித்த பேட்டியின் மூலம் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார். 

Advertisement

Advertisement