• Apr 28 2024

தொகுப்பாளினி டிடிக்கு இரண்டாவது திருமணமா?முற்றுப்புள்ளி வைத்த சகோதரி பிரியதர்ஷினி

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக கலக்கி வரும் டிடி கடந்த 2014-ஆம் ஆண்டு  தொகுப்பாளினி (டிடி)  திவ்யதர்ஷினி  கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

பின்னர்  இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டு பிரிந்து சென்று விட்டனர்.

இதன் பிறகு டிடி யாரையும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.  இதனால் அவருடைய இரண்டாவது திருமணம் குறித்து அடிக்கடி சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுவது வழக்கமான ஒன்றாக உள்ளது . அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட  டிடி கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் பரவியது.

இது வதந்தி தகவலா அல்லது உண்மை தகவலா என பலரும் குழம்பி வந்த நிலையில் இது  குறித்து தொகுப்பாளினி டிடியின் தங்கையும், நடிகையுமான பிரியதர்ஷினி சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் எதற்காக இப்படி தகவல் பரவுகிறது என்று தெரியவில்லை.

நான் இந்த தகவலை பற்றி டிடி இடம் கேட்டேன் அதற்கு அவர் எனக்கே தெரியாது என்று கூறியுள்ளார். எனவே இது வெறும் வதந்தி தகவல் மட்டுமே என கூறி டிடியின் இரண்டாவது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரியதர்ஷினி .

Advertisement

Advertisement

Advertisement