• May 19 2024

பொன்னியின் செல்வன் இயக்குநர் மணிரத்னத்தின் மகன் இவர் தானா?- இதுவரை தெரியாமல் போச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் பிரமாண்ட திரைப்படஙடகளை எடுக்கக் கூடிய முன்னணி இயக்குநராக வலம் வருபவர் தான் மணிரத்னம். இவரது இயக்கத்தில் தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி வருகின்றது.இப்படத்தின் ரிலீஸிற்காக ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

அத்தோடு இவர் கடந்த 1983ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான பல்லவி அனு பல்லவி என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து தமிழில் அரவிந்த சாமியை வைத்து ரோஜா என்னும் படத்தை இயக்கியிருந்தார்.இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.


இவர் கடந்த  1988ம் ஆண்டு நடிகை சுஹாசினியை திருமணம் செய்தார். இவர்களுக்கு 1992ம் ஆண்டு நந்தன் என்னும் மகன் பிறந்தார். அத்தோடு நந்தன் வெளிநாட்டில் படித்து வருவதோடு அவ்வப்போது இந்தியா வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது இவர்களது மகன் நந்தனின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.அந்தப் புகைப்படத்தைப் பார்த்த பலரும் அடடே இவர் தான் மணிரத்னத்தின் மகன் என்று கேட்டு வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement