• Jun 27 2024

பிக்பாஸ் வீட்டுக்கு செல்கின்றாரா அமலாபால்…இது தான் காரணமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

‘நீலதம்ரா’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகமானவர் தான் நடிகை அமலாபால்.மிழில் இவருக்கான நாயகி என்ற அந்தஸ்தைக் கொடுத்தது ‘சிந்து சமவெளி’ என்ற திரைப்படமே.

இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் 2010-ஆம் ஆண்டில் வெளியாகி இருந்த ‘மைனா’ திரைப்படத்தின் மூலம் மேலும் மக்கள் மத்தியில் பிரபலமானார். இத்திரைப்படத்திற்காக இவர் சிறந்த புதுமுக நடிகைக்கான விருதினை வென்றிருக்கின்றார். அத்தோடு ‘காதலில் சொதப்புவது எப்படி, வேட்டை, தெய்வத் திருமகள், தலைவா’ எனப் பல படங்களில் நடித்திருக்கின்றார்.

நடிகை அமலாபால் இயக்குநர் ஏ.எல்.விஜய் என்பவரைக் காதலித்து வந்த நிலையில் 2014 இல் திருமணமும் செய்து கொண்டார். எனினும் இவர்கள் இருவரிற்குமிடையில் இடம்பெற்ற கருத்து வேறுபாடுகளின் காரணமாக அவரது மண வாழ்க்கை 2 வருடங்களிற்குள் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து இப்போது தொடர்ச்சியாக துணிச்சலான மற்றும் சர்ச்சையானக் கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஆனால் இப்போது முன்புபோல அவருக்கு அதிக வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் தற்போது அவர் விரைவில் தொடங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement