• Jan 19 2025

Google கூட பிளாக் ஆனதாம்.. கூத்தாடிகளை கொண்டாடாதீர்கள்! TVK தலைவரை நேரடியாக தாக்கிய வேல்முருகன்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி பெயருடன் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

இதை தொடர்ந்து தனது கட்சியை விரிவாக்கவும், மக்களுக்கான சேவையை திறம்பட செய்வதற்காகவும் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு விறுவிறுப்பாக தனது அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியில் உறுப்பினராக இணைவதற்கு செயலியொன்றை அறிமுகப்படுத்தி இருந்தார். இதில் சுமார் 50 லட்சத்திற்கும்  மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள்.


இந்த நிலையில், கூத்தாடிகளை கொண்டாடுகின்ற நிலையை உடைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,


நேற்று ஒரு கதாநாயகன் கட்சி ஆரம்பித்து உறுப்பினர்களை சேர்த்து வருகிறார், அந்த கட்சியின் பெயர் கூட எனக்கு தெரியவில்லை 50 லட்சம் பேர் அந்த கட்சியில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக ஊடகத்தில் செய்தி வெளியிடுகின்றனர்.

இதனால் Google பிளாக் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள். கூத்தாடிகளை கொண்டாடுகின்ற நிலையை உடைக்க வேண்டும். நான் பேசிவிட்டு சென்ற பிறகு விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்கக்கூடும், அவர்கள் எல்லாம் ரசிகர்கள் என கூறியுள்ளார் வேல்முருகன்.

Advertisement

Advertisement