• Apr 27 2024

ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை பொறுத்தவரையில் இல்லத்தரசிகளின் நாடகங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதை கருத்தில் கொண்டு பல சேனல்கள் அடிக்கடி புதிய சீரியல்களை தயாரித்து ஒளிபரப்பி வருகின்றனர். தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஜீ தமிழ் உள்ளது. இந்த தொலைக்காட்சிக்கு என்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே கொண்டுஉள்ளது .

இந்த நாடகங்கள் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டுள்ளது. தற்போது இந்த சிரியல்களின் நேரங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் ,

வேலையிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு தம்பதியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள சீரியல் தொடர் "தவமாய் தவமிருந்து". குடும்பங்களில் பிள்ளைகளுடன் அதிகம் உரையாடத அப்பாக்கள் அதிகம். குறிப்பாக பிள்ளைகள் வளர வளர பிள்ளைகள் தனித்து விடப்படுகின்றனர். அம்மாக்களின் பிரச்சினை. சிரமங்கள் வழி தெரியும் அளவிற்கு கூட அப்பாக்களின் உழைப்பும் வலியும் பிள்ளைகளுக்கு தெரிவதில்லை. பிள்ளைகளின் நடத்தையினால் அடுத்தடுத்து நடக்கப்போகும் எதார்த்தமான சம்பவங்களைக் கொண்டு இத்தொடர் பின்னப்பட்டிருக்கிறது.

ஒரு பெரிய குடும்பத்தின் சுமையை தனியாக தாங்கி நிற்கும் பெண்தான் "ரஜனி" வீட்டில் அனைத்து செலவும் அவள்தான் பார்த்தாக வேண்டும். இப்படிப்பட்ட பெண்ணின் கதைதான் ரஜினி சீரியல் தற்போது இந்த சீரியல் டிஆர்பி யில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர் ஆன வேதவள்ளி கல்வியின் முக்கியத்துவத்தை நம்புகிறார். படிப்பு என்பது மிகவும் முக்கியமானது. துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் யாரு மாட்டி கொள்ளக் கூடாது என்ற அபிப்பிராயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சத்யா என்ற பெண் தனது வாழ்க்கையை ஆண் இயல்பு கொண்ட பெண்ணாக வாழ்கிறார். அவர் தனது அம்மா பாட்டி மற்றும் மூத்த சகோதரி என்பவர்களுடன் வாழ்ந்து வருகின்றாள். எதிர்பாராத சூழ்நிலையில் பணக்காரரான பிரபு மீது காதல் மலர்கிறது. பின்பு அவரையே திருமணம் செய்து பிரிந்து வாழ்கின்ற சத்தியா, என்ற ரீதியில் கதை நகர்த்தப்படுகிறது.

இவ்வாறு வித்தியாசமான கதையம்சங்களுடன் ஒளிபரப்பாகும் நாடகங்கள் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.அந்தவகையில் வருகின்ற ஜூலை 4-இல் இருந்து தவமாய் தவமிருந்து சீரியல் மாலை 06.00 மணிக்கும், வித்தியா No.1 சீரியல் இரவு 09.30 மணிக்கும், ரஜனி சீரியல் 10.00மணிக்கும் சத்தியா 10.30 க்கும் ஒளிபரப்பாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement