• Dec 26 2024

பப்லு எனக்கு சரி வரல.. இப்போ மனசுக்கு பிடிச்சவரோட இருக்கேன்! ஷீத்தல் கொடுத்த பதிலடி

Aathira / 14 hours ago

Advertisement

Listen News!

சின்னத்திரை சீரியல் நடிகராக பப்லு சமீப காலமாகவே வில்லனாக நடிக்க  தொடங்கி மிரட்டி வருகின்றார். இவர் இறுதியாக ரன்விக் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் படத்தில் வில்லனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

சமீபத்தில் இவர் வழங்கிய பேட்டி ஒன்றில் தனக்கு ஹாலிவுட் முதல் பாலிவுட்  வரை 20க்கும் மேற்பட்ட படங்கள் கைவசம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இவர் அடிக்கடி ஜிம் ஒர்க் அவுட் பண்ணும் வீடியோக்களையும் வெளியிட்டு தனது பாடி பிட்னஸ் ஐ காட்டி வருகின்றார்.

 நடிகர் பப்லு தனது முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இரண்டாவது ஆக சீத்தல் என்ற 21 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்யாமலே லிவ்விங் டு கெதரில் வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவரும் காதல் புறாக்களாக வலம் வந்த போதிலும் திடீரென விரிசல் ஏற்பட்டு பிரிந்தார்கள்.

d_i_a

இந்த பிரிவு தொடர்பில் இரண்டு தரப்பிலும் எவ்விதமான காரணமும் சொல்லப்படவில்லை. எனினும்  ஒரு சில நாட்களுக்கு முன்பு சீத்தல் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருந்தார்.


இந்த நிலையில், சீத்தல் வழங்கிய பேட்டி ஒன்று வைரல் அதி வருகின்றது. அதில் அவர் கூறுகையில், பப்லு எனக்கு கொடுத்த அனைத்து பரிசு பொருட்களையும் திரும்ப அவருக்கே கொடுத்து விட்டேன். எனக்கு அவர் கொடுத்த காஸ்ட்லி கிப்டான மோதிரத்தையும் திரும்ப அவரிடம் கொடுத்து விட்டேன். .

அதை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன். அவருடன் இருப்பது எனக்கு சரி வராது எனப்பட்டது.  இப்போ நான் செய்வது சரி என தோன்றுவதால் அவரைப் பிரிந்து மனதுக்குப் பிடித்த இன்னொருவருடன் வாழ்ந்து வருகின்றேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement