கடந்த அக்டோபர் ஆறாம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாளை எட்டி உள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை அவர்களது குடும்பத்தினர் சந்திக்க வந்துள்ள காட்சிகள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்த நிலையில், இன்றைய தினம் வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பவித்ராவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்கள். இதன்போது பவித்ரா எமோஷனலாகி அழுத காட்சிகள் பார்ப்போரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.
d_i_a"
அதன்படி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பவித்ராவின் குடும்பத்தாரை பார்த்ததும் அவர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார். இதன்போது அங்கு வந்த சிறுவன் நீ ஏன் கேப்டன் ஆகல என கியூட்டாக கேட்கின்றார்.
மேலும் உன்னை பார்க்க பெருமையாக உள்ளது. எதற்கும் கவலைப்படாத.. கேம் நல்லா விளையாடு.. என்று பவித்ராவின் அம்மா சொல்லும் போது பவித்ரா கதறி அழுகின்றார். மேலும் உங்களை பெருமைப்பட வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் இவ்வளவு தூரம் ஓடிக் கொண்டு உள்ளேன் என பவித்ரா சொல்லுகிறார்.
இதைத்தொடர்ந்து பவித்ரா என்றா பிளவர்னு நினைச்சியா Fire என்று புஷ்பா பட பாணியில் குறித்த சிறுவன் தெரிவித்த அதிரடி காட்சியும் ப்ரோமோவில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Listen News!