கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவர் ஆரம்பத்தில் சின்ன சின்ன ஷார்ட் பிலிம்ஸ் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அதன் பின்பு லவ் டுடே படத்தில் இயக்குநராக மட்டும் இல்லாமல் தன்னை கதாநாயகனாகவும் அடையாளப்படுத்தி இருந்தார். இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது. அதில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்திலும் நடித்து வருகின்றார் பிரதீப் ரங்கநாதர்.
பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரவபூர்வமாகவே அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால் டிராகன் படக் குழு அதன் ரிலீஸ் தேதியை மாற்றி அறிவித்துள்ளது.
அதன்படி டிராகன் திரைப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் தல பக்கத்தில், ' தல வந்தால் தள்ளிப் போய் தானே ஆகணும்..' என சிரித்த முகத்துடன் குறிப்பிட்டு டிராகன் திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.
Listen News!