• May 18 2024

எனக்கு பிறந்ததில் இருந்து இது இருக்கு வேணும் என்றால் சேஃர்ட்டிபிக்கேட் காட்டவா?- ப்ளூ சட்டை மாறனால் மீண்டும் கடுப்பான இயக்குநர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முதல் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படம் வெளியாகி பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்தாலும் பார்த்திபன் ஒரு அவார்ட் பைத்தியம் என்றால், கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு வாய்ஸ் ஓவர் பைத்தியம் என விமர்சகர்  ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து இருந்தார்.

இதனை அடுத்து கௌதம் மேனன் அண்மையில் அளித்த பேட்டியில்  ப்ளூ சட்டை மாறன் பற்றி பேசுகையில் ‘ ப்ளூ சட்டை மாறன் மேல ‘ அவ்வளவு கடுப்பு. அவரது யூடியூப் சேனலுக்கு ஸ்பான்சர் கிடைக்குறதுக்கும், அவருக்கு பணம் வர்றதுக்காகவும், ஒரு படத்தை தரக்குறைவா விமர்சனம் செய்றத பார்க்கும்போது எனக்கும் ரொம்ப கோபம் வரும். நீ ரிவ்யூ பண்ணு, ஆனா இளக்காரமாவோ, தரக்குறைவாகவோ விமர்சனம் பண்ணாத.


அவர் சொன்ன திருச்சிற்றம்பலம் படத்தோட விமர்சனத்தை பார்த்தபோது, அதில் முதல் 10 நிமிஷம் படத்தை பற்றி கழுவி ஊற்றி விட்டு, நடுவுல படம் நல்லா இருக்குன்னு கூறி விட்டார், இதெல்லாம் பார்க்குறப்போ, இறங்கி ஏதாவது செய்யலாமாங்குற அளவுக்கு கோபம் வருது. மத்தவங்களுக்கு அப்படி கோபம் வருதான்னு எனக்கு தெரியல. ஆனா உண்மையிலேயே எனக்கு இறங்கி ஏதாவது செய்யலாமான்னு தோணுது என்று கூறியுள்ளார்.

கெளதம் மேனனின் இந்த விமர்சனத்திற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்து வரும் ப்ளூ சட்டை மாறன் அவரது பெயரில் இருக்கும் மேனன் என்ற பெயரை  விமர்சித்து ”கெளதம் மேனன் இயக்கிய முதல் படமான மின்னலே பட போஸ்டரை பதிவிட்டு அதில் கெளதம் மேனனின் பெயர் கெளதம் என்று குறிப்பிட்டு இருப்பதை சுட்டிகாட்டி இருக்கிறார்.மேலும், தமிழ் சினிமாவில் கெளதம் என்ற பெயருடன் நுழைந்துவிட்டு பின்னர்  மேனன் என்ற பெயரை போட்டுகொண்டு தன்னை உயர்த்திக்கொண்டார் எனக் கூறியிருந்தார்.


இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கெளதம் மேனன் ‘எனக்கு பிறக்கும்போது வைத்தது கௌதம் வாசுதேவ் மேனன் தான். என் கௌதம் சான்றிதழ்களிலும் அப்படித்தான் இருக்கும். மின்னலே படம் பண்ணும் போது என் பெயரை கௌதம் வாசுதேவ் மேனன் என்று போட்டு தான் தயார் செய்து இருந்தோம். ஆனால், அந்த படத்தின் தயாரிப்பாளர் முரளி ‘இல்லை அப்படி வேண்டாம் கௌதம் என்று வை, சங்கர் பெயர் எப்படி ஷார்ட்டாக இருக்கிறதோ அப்படி வைக்க வேண்டும்’ என்று அவர் சொன்னதால்தான் அப்படி போட்டேன். ஆனால், அதன் பின்னர் வந்த படங்களில் எல்லாம் கௌதம் வாசுதேவ் மேனன் என்றுதான் என் பெயரை போட்டு இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement