• Sep 08 2024

பாலைய்யா காலில் வீழ்ந்தால் எல்லாம் சரியாகிடும்.. நோ பிரச்சினை! யூடியூப் பிரபலம் பகிர்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக திகழ்பவர் தான் பாலகிருஷ்ணா. இவர் ரசிகர்களால் பாலைய்யா என செல்லமாக அழைக்கப்படுகின்றார். இவர் நடிக்கும் படங்களில் வரும் காட்சிகள் அதிகமாக ட்ரோலுக்கு உள்ளாகுபவையாக காணப்படுகின்றது.

கடந்த மாதம் அஞ்சலியிடம் அவர் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.  சமூக வலைதளங்களில் அதிகமாக கண்டனங்கள் எழுந்த நிலையில், நானும் பாலகிருஷ்ணாவும் ஒருவரை ஒருவர் மதிக்கிறோம் என்று பதிலடி கொடுத்திருந்தார் அஞ்சலி.

பிக் பாஸ் சீசன் 7ல் பங்கு பற்றிய போட்டியாளரான விசித்ரா சொன்ன விஷயமும் பாலகிருஷ்ணாவை பற்றியது தான். ஆனாலும் கடந்த மாதம் அஞ்சலிடம் இவர் நடந்து கொண்ட விதம் உச்சகட்ட கண்டனத்தைப் பெற்றது.


இந்த நிலையில், பிரபல பத்திரிகையாளரான அந்தணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பாலகிருஷ்ணாவை பற்றி கூறியுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், நயன்தாரா பாலகிருஷ்ணா உடன் இணைந்து இதுவரை நான்கு படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு அஞ்சலிக்கு நடந்தது போல எதுவும் நடந்ததில்லை. பாலகிருஷ்ணாவை பொருத்தவரை பிறர் தன்னை மதித்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்.

அவரின் படப்பிடிப்புக்கு சென்ற உடனே அவரது காலில் விழுந்து வணங்கி விட்டால் எல்லாம் முடிந்து விட்டது. அதற்கு பிறகு அவரிடம் எந்த டார்ச்சரும் இருக்காது நிம்மதியாக நடிக்கலாம் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement