• May 09 2024

உங்க தூண்டிலில் நான் சிக்க மாட்டேன் மாஸ்டர்- திடீரென மனம் மாறிய ரச்சிதா கொடுத்த ஷாக்- பல்பு வாங்கிய ராபர்ட்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் வீட்டிற்குச் சென்ற நாளிலிருந்து ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவைக் காதலிப்பதாக கூறி வருகின்றார். இதனால் ரச்சிதா இதனைக் கண்டு கொள்ளாதது போல இருந்து வருகின்றார். இது ஒருபுறம் இருக்க ராபர்ட் மாஸ்டர் தான் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் இன்று எவிக்‌ஷனில் எப்படியும் வெளியே போய் விடுவோம் என்ற நினைப்பில் காலையிலிருந்து புலம்பிக் கொண்டிருந்த ராபர்ட் மாஸ்டர்  ரச்சிதாவிடம் சென்று பேசியுள்ளார்.


ஆனால் ரட்சிதா சிரித்துக்கொண்டே "மாஸ்டர் நான் உங்களை குழந்தையாக பார்க்கிறேன். உங்களை நான் அந்த எண்ணத்தில் பார்க்கவில்லை. தயவுசெய்து இந்த எண்ணத்தை எல்லாம் விட்டு விடுங்கள். நட்பாக இருந்தோம், நட்பாக பழகினோம் இதை ஒரு பாசிங் கிளவுடாக பாருங்கள்" என்று தெரிவித்தார். ஆனால் கிளவுட் (மேகம்) தானே அது இருக்கத்தானே செய்யும் அது அப்படியே இருக்கட்டும் என்று சமாளித்து பார்த்தார் மாஸ்டர். ஆனால் நான் அப்படிப்பட்டவள் இல்லை நான் வெளியே சென்றால் யாரிடம் பேசக்கூட மாட்டேன் என்று ரட்சிதா தெரிவித்தார்.

போன் நம்பர் கொடு நான் பேசுகிறேன், சந்திக்கலாம் என்று ராபர்ட் மாஸ்டர் மெல்ல தூண்டில் போட்டார். நான் அப்படிப்பட்டவள் இல்லை மாஸ்டர் நான் பெரும்பாலும் வெளியே போனால் யாருடனும் பழக மாட்டேன் பெரும்பாலும் தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டேன் ஆகையால் நீங்கள் அந்த எண்ணத்தை கைவிட்டு விடுங்கள் இது சீரியல் வாழ்க்கை அல்ல என்று தெரிவித்தார். அதன் பிறகு ராபர்ட் மாஸ்டர் என்னென்னமோ சொல்லி பார்த்தும் ரச்சிதா தன் நிலையில் உறுதியாக இருந்தார். "நாம் வந்தோம் பழகினோம், சென்றோம் அந்த அளவிற்கு மட்டும் இருங்கள் இருக்கிற நாளில் சந்தோஷமாக இருங்கள். நீங்கள் போக மாட்டீர்கள் போகும் வரை சந்தோசமாக இருங்கள். வீணாக மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். என்று சொன்னார்.


நீங்கள் மற்றவரிடம் ஒரு மாதிரி என்னிடம் ஒரு மாதிரியா பழகுவது எனக்கு ஒரு மாதிரி மனதை பிசைந்தது என்பதால் நான் அடிக்கடி மூடு அவுட் ஆனேன். என்னிடம் மட்டும் ஏன் இப்படி நடக்கிறார் என்று நினைப்பேன். ஆகவே நீங்கள் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் உங்கள் வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்கள். வெளியே பெரிய உலகம் இருக்கிறது" என்று ரச்சிதா அறிவுரை கூறினார் ஆனாலும் ராபர்ட் மாஸ்டர் "தன் முயற்சியில் சற்று மனம் தளராத விக்கிரமாதித்தன்" போல் மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டே இருந்தார்.என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement