• May 09 2024

"மூர்த்தி அண்ணனை விட்டு கொடுக்க மாட்டேன்" - பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா தங்கை திருமணத்தில் அண்ணன் தம்பிகள் அனைவரும் தனித்தனியே மொய் வைக்க, கம்ப்யூட்டர் மொய் டேட்டேபேஸில் ஜீவா - மீனாவின் பெயர் மட்டும் இல்லாமல் போகின்றது.

இது மீனாவின் அப்பா மூலமாக மீனா & ஜீவாவுக்கு தெரியவர, ஜீவா தன் மூத்த அண்ணன் மூர்த்தி உள்ளிட்ட சகோதரர்களிடம்  கோபத்தில் வந்து, “எங்களை அவமானப்படுத்திவிட்டீர்களே.. எனக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்களே!” என அழுது கத்துகிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருந்து அவர் பிரிந்து சென்றுவிடுகிறார்.


ஆனால் இந்த குழப்பத்துக்கெல்லாம் காரணம் கண்ணன் செய்த வேலைதான். ஆம், அவர்தான் மூத்த அண்ணன் மூர்த்தி சொன்னதை கேட்காமல், தன்னை போலவே மற்றவர்களுக்கும் அவரவர் பெயரில் மொய் போட்டுவிட்டார்.அத்தோடு  ஜீவா மட்டும் தன் அண்ணன் மொய் வைத்துக்கொள்வார் என விட்டுவிட அது பெரிய பிரச்சனையில் முடிந்தது.

இவ்வாறுஇருக்கையில் ஜீவா கேரக்டரில் நடித்து சென்சேஷனல் ஆன நடிகர் வெங்கட் ரங்கநாதன் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த கலகலப்பான பேட்டியில், “ஜீவா தரப்பில் நியாயம் இருக்கு. அதே சமயம் மூர்த்தி தரப்பிலும் நியாயம் இருக்கு. இது கேரக்டர்கள் தான் என்றாலும் மக்கள் தங்களுடன் கனெக்ட் செய்துகொண்டு ஏன் ஜீவா தம்பி அண்ணனை புரிந்துகொள்ளாமல் பேசுகிறீர்கள்? மாமனார் பேச்சை கேட்டு முடிவெடுக்கிறீர்கள்? மூர்த்தி ஏன் இப்படி தம்பியை கஷ்டப்பட விடுகிறார்? ஜீவாவின் மாமனார் ஜனார்த்தனன் தானக மாப்பிள்ளையை தூண்டிவிடவில்லை, அதற்கான சந்தர்ப்பம் வரும்போது கேள்விகளை கேட்டுவிடுகிறார் அவ்வளவு தானே? கண்ணன் செய்த தவறுதான் எல்லாவற்றுக்கும் காரணம்” என்றெல்லாம் பல கோணங்களில் பேசுகின்றனர்.


இதையெல்லாம் பார்க்கும்போது இந்த சீரியலின் கதாபாத்திரங்களை தங்கள் வீட்டு மாந்தர்களாக பாவித்து மக்கள் பேசுவது ஒரு வித மகிழ்ச்சியை தருகிறது. அத்தோடு அவர்களின் பேரன்புதான் இது என நெகிழ்ச்சியுடன் பேசுகிறார் நடிகர் வெங்கட்.

இதேபோல் சில நிமிடம் செல்போன் மூலம் வெங்கட்டிடம் இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஸ்டாலின் (பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி), “ஜீவா தன் தரப்பு நியாயத்தையும், மூர்த்தி தன் தரப்பு நியாயத்தையும் சொல்கின்றனர். அது கேரக்டர். கதைப்படி நான் கண்ணனை அடிக்க வேண்டும் என்றால் அதை நான் செய்தே ஆக வேண்டும்.

மற்றபடி இதில் இருந்து மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் நாங்கள் அண்ணன் தம்பிகள் ஓருயிர் 4 உடல்கள். ஆனால் ஒரு சூழ்நிலையில் யோசிக்காமல் பேசவோ, தவறான முடிவெடுக்கவோ கூடாது; உட்கார்ந்து பேசவேண்டும், அது செய்யாததால் பிரிவு உண்டாகிறது. ஆனால் அண்ணன் தம்பிகள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள், என்றாயினும் ஒன்றாகிவிடுவார்கள். மற்றபடி என் தம்பி நடிகர் வெங்கட் ஷூட் முடிந்தால் என்னை போலவே குடும்பத்தினர் மீது கவனம் செலுத்துவார்.” என கலகலப்பாக தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement