• May 18 2024

கண்டிப்பா அந்த படத்தோட வொர்க் பண்றப்போ சொல்றேன்-கமல் பட அப்டேட் கொடுத்த பா.ரஞ்சித்!!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டவர் இயக்குநர் பா. ரஞ்சித். இவர் அட்டகத்தி' மூலம் இயக்குநராக அறிமுகமானார்.தொடர்ந்து கார்த்தியை வைத்து 'மெட்ராஸ்' என்ற படத்தையும் இயக்கி இருந்தார்.இதற்கு அடுத்தபடியாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா ஆகிய திரைப்படங்களையும் அடுத்தடுத்து இயக்கி இருந்தார் பா. ரஞ்சித்.

இதனைத் தொடர்ந்து, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இருந்த பா. ரஞ்சித், தற்போது விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்து வரும் 'தங்கலான்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். பழைய காலகட்டத்தில் நடக்கும் கதை தான் தங்கலான் என இந்த படத்தின் அறிமுக வீடியோ மூலம் தெரிய வருகிறது.


திரைப்படங்களை ஒரு பக்கம் இயக்கி வந்தாலும், நிறைய கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்தும் உள்ளார். அந்த வகையில், அடுத்ததாக வெளி வரவுள்ள "பொம்மை நாயகி" என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார் பா. ரஞ்சித். யோகி பாபு , அருள் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஷான் இயக்கி உள்ளார்.

பொம்மை நாயகி திரைப்படம், பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இது தொடர்பான பிரஸ் மீட் ஒன்று நடைபெற்றிருந்தது. இதில், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பா. ரஞ்சித் கலந்து கொண்டு பேசி இருந்தார். தொடர்ந்து, வெளியே வந்த அவரிடம் பல்வேறு கேள்விகளை பத்திரிக்கையாளர்கள் கேட்டிருந்தனர்.


இதில், பொம்மை நாயகி படம் குறித்தும் பேசி இருந்தார் பா. ரஞ்சித். அப்போது, தங்கலான் படம் குறித்தும், அதன் பின்னர் கமல்ஹாசனுடன் இணையும் படம் குறித்தும் கேள்விகளை பத்திரிகையாளர்கள் எழுப்பி இருந்தனர்.

இதற்கு பதிலளித்து பேசிய பா. ரஞ்சித், "இப்போதைக்கு தங்கலான் படம் தான் போய்ட்டு இருக்கு. கண்டிப்பா அந்த படத்தோட வொர்க் பண்றப்போ சொல்றேன். இரண்டு மாதிரியான கதைக் களங்கள் இருக்கு. நான் சொல்றேன்" என தெரிவித்தார்.





Advertisement

Advertisement