• May 12 2024

விஜய் சேர் சொன்ன விடயம் எனக்கு கிலுகிலுப்பாக இருந்திச்சு- ஸ்வீட்டான சீக்ரெட்டை போட்டுடைத்த யுவன் சங்கர் ராஜா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  காமெடி, லவ், இன்ஸ்பயரிங், சோகம் என அனைத்து முறையிலும் தனது இசையின் மூலம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தவர் தான் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து வைத்துள்ளார்.

இந்த நிலையில் இவர் நேற்றைய தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடி இருந்தார்.இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.


அத்தோடு தனது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுடன் டுவிட்டர் பக்கத்தில் கலந்துரையாடினார்.அப்போது நெட்டிசன் ஒருவர் நடிகர் விஜய்யுடன் எப்போது இணைவீர்கள் என்றும், சமீபத்தில் விஜய்யை சந்தித்து தொடர்பான அனுபவம் குறித்தும் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் இதற்கு யுவன் சொன்ன பதில், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

விஜய் குறித்த நெட்டிசன் கேள்விக்கு பதிலளித்த யுவன், "விரைவில் இந்த கூட்டணி அமையும் என நான் நம்புகிறேன். நாங்கள் சமீபத்தில் சந்தித்துக் கொண்ட போது, சிறப்பான உரையாடலை கொண்டிருந்தோம். விஜய் சார் ரொம்ப ஸ்வீட்ன்னு சொல்லலாம். நிறைய படங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் சந்தித்த சமயத்தில் மாநாடு ரிலீஸ் ஆகி இருந்தது என நான் நினைக்கிறேன். அப்போது, அதை பற்றி நிறைய கேட்டு தெரிந்து கொண்டார்.

அந்த சமயத்தில், விஜய் சார் சொல்லி மறக்க முடியாத விஷயம் எதுவென்றால் அவருடைய மகன் எனது வெறித்தனமான ரசிகர் என சொன்னது என் மனதை தொடும் வகையில் இருந்தது" என யுவன் கூறி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement