• May 12 2024

இயக்குநரை அசிங்க அசிங்கமாகத் திட்டினேன் வாழ்க்கை கொடுத்ததே செங்கல் தான்- ஒரே காமெடியில் பிரபலமான காமெடியனின் உருக்கமான பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!


சினிமாவைப் பொறுத்தவரை பல புதுமுகங்கள் ஒவ்வொரு நாளும் அறிமுகமாகிக் கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் அவர்களின் சிலர் மட்டுமே வெற்றி அடைகிறார்கள். சிலர் அதிக ஆண்டுகள் நடித்தாலும் இன்னும் பிரபல்யமாகாமலே இருக்கின்றனர்.இவ்வாறு திரிஷா இல்லைனா நயன்தாரா படத்தின் மூலம் பிரபலமானார் தான் செங்கல் சைக்கோ ராம்குமார்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் அந்த பேட்டியில் அவர் கூறுகையில் “சொந்த ஊர் மதுரை தான் என்னுடைய அப்பாவின் மூலம்தான் நான் கலா மாஸ்டர் குழுவில் சேர்ந்து சில ஆண்டுகள் அவருடன் இணைந்து பணியாற்றி வந்தேன். அதற்குப் பிறகு பேராண்மை ஆயிரத்தில் ஒருவன் பொல்லாதவன் போன்ற படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்கள் கிடைத்தேன்.ஆனால் அந்த கதாபாத்திரங்கள் பெரிய பிரபலத்தை கொடுக்கவில்லை.


நான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிய போது என்னை பலர் ஏமாற்றினார்கள். பார்த்திபனின் துணை இயக்குநர் என்று கூறிக்கொண்ட ஒருவர் என்னை வைத்து படம் எடுப்பதாகவும் எனக்கு முக்கியமான கதாபாத்திரம் தருவதாகவும் கூறினார். அவரிடம் சிலவற்றை கொடுத்து நான் ஏமாந்தேன். அதற்குப் பிறகுதான் வெங்கடேஷ் என்பவர் எனக்கு அறிமுகம் ஆகினார். அவர்தான் எனக்கு பேராண்மை படத்தின் இயக்குநரை அறிமுகப்படுத்தினார். பேராண்மை படத்தின் இயக்குநர் 6 மாத காலம் ஆகும் என்று கூற அவரும் 6 மாதங்கள் கழித்து எனக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அந்த படத்தில் கும்பலோடு கும்பலாகத்தான் நான் இருந்தேன்.

பேராண்மை படத்தின் வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் தான் ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அந்த படத்தின் இயக்குநர் செல்வராகவன் தான் என்னுடைய குருநாதர் என்றே சொல்லலாம். நடிப்பு சம்மந்தமாக பல விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்தார். அவர் மிகவும் நல்ல மனிதர், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நாங்கள் கஷ்டப்பட்ட காரணத்தினால் எங்களை லடாக் கூட்டிச்சென்றார். அதற்கு பிறகு பல இடங்களில் வாய்ப்பு தேடி அளித்திருக்கிறேன் ஆனால் வலுவான கதாபாத்திரம் கிடைக்கவில்லை.


அதற்கு பிறகு திரிஷா இல்லைனா நயன்தாரா படத்தின் வாய்ப்பு கிடைத்து. அந்த படத்தில் இயக்குநர் அந்த சைக்கோ கதாபாத்திரத்திற்கு பல நாட்களாக தேடினார். பின்னர் நான் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்ததை பார்த்து அவர் இவர் தான் இந்த கதாபத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று என்னை தேர்வு செய்தார். அந்த படத்தின் மேனேஜரிடம் எனக்கு போன் செய்து கேட்டாக சொல்லியிருக்கிறார். இதனால் மேனேஜரும் எனக்கு போன் செய்தார்.

அப்போதெல்லாம் கூட இருக்கும் பசங்க போன் செய்து உங்களுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு என்று கலாய்ப்பார்கள். நானும் மேனேஜர் தான் கூப்பிடுகிறார் என்று தெரியாமல் “அங்கேயே இருடா வர்றேன்” என்று அசிங்க அசிங்கமாக திட்டிவிட்டேன். பின்னர் அங்கே சென்று பார்த்தபிறகுதான் தெரிகிறது படத்தின் மேனேஜர்தான் போன் செய்திருக்கிறார் என்று. நான் பேசியதை ஸ்பீக்கரில் போட்டு தயாரிப்பாளர், இயக்குநர் போன்றவர்கள் கேட்டு சிரித்துக்கொண்டிருந்தார். அதற்கு பிறகுதான் எனக்கு “த்ரிஷா இல்லைனா நயன்தாரா” படத்தில் வாய்ப்பு கிடைத்து என்று பல விஷயாயங்களை அந்த பேட்டியில் கூறினார் செங்கல் சைக்கோ ராம்குமார்.


Advertisement

Advertisement

Advertisement