• Apr 27 2024

“ஆஸ்கார் விருதெல்லாம் பெரிய விருதுன்னு நான் நினைச்சதே இல்லை” - இணையத்தில் வைரலாகும் இயக்குநர் அமீர்-இன் பரபரப்பான பேச்சு!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கார் விருது 95 வது ஆண்டு விழா கோலாகலமாக லாஸ் ஏஞ்சல்ஸ் – ல் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து சிறந்த திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுகளுக்காக பல பிரிவுகளில் போட்டியிட்டனர்.

பல்வேறு நாடுகளிலிருந்து இந்த விழாவிற்கு தலை சிறந்த கலைஞர்கள் கலந்து கொண்டனர். விழாவில் சிறந்த பாடல் பிரிவில் ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் விருதினை வென்றது. விருதினை பாடலின் இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் மேடையேறி பெற்றுக் கொண்டனர். அதனை தொடர்ந்து சிறந்த ஆவண குறும்பட பிரிவில் ‘தி எலிபெண்ட் விச்பரர்ஸ்/ விருதினை வென்றது.

இதனையடுத்து இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த இரண்டு படங்களும் ஆஸ்கார் விருதினை வென்றதில் இந்திய நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.  ஒவ்வொரு திரையுலக ரசிகர்களும் இவ்விரு விருதுகளையும் கொண்டாடி படக்குழுவினரை வாழ்த்தி வருகின்றனர். 

இந்நிலையில் வாழ்த்துகள் ஒருபுறம் இருந்தாலும் விமர்சனமும் எழுந்தது. இதைவிட சிறந்த பாடல்கள் அல்லது சிறந்த இசையமைப்பாளர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்ற விமர்சனமும் எழுந்தது .இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்திற்கு விருது பெற்றதை எப்படி பார்க்கிறீர்கள் என்பது குறித்து இயக்குநரும் நடிகருமான அமீர் அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது இது குறித்து அவர் பேசியதாவது, 

" இந்திய திரைப்படங்களுக்கு சர்வதேச அளவில் விருதுகள் கிடைப்பது பாராட்டுக்குரிய விஷயம்.  அதுக்குள்ள அரசியல் இருக்கானு ஆராய்ந்து பார்ப்பது நம்ம வேலை கிடையாது. கலைக்கு அரசியல் கிடையாது. அந்த வகையில் ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு விருது கிடைத்தது இந்திய திரையுலகத்திற்கு பெருமை. ஆனால் ஆஸ்கார் விருது பெரிய விருது னு நான் நினைச்சதே இல்லை. அது எல்லொரும் பார்ப்பதாலே அதற்கு முக்கியத்துவம் இருக்கே தவிர அது அந்த நாட்டு தேசிய விருது போலதான்.

இருந்தாலும் இந்திய திரைப்படங்களுக்கு அங்கு அங்கீகாரம் கிடைக்கும் போது இந்தியர்களுக்கு கிடைக்க கூடிய பெருமை அது எனக்கு கிடைத்தது போல நானும் நினைத்து கொள்கிறேன்." என்றார்.


Advertisement

Advertisement

Advertisement