• Apr 15 2026

நான் விரும்பியபடி படமெடுக்க 4 வருஷம் வேணும்..! விடுதலை 2 தொடர்பில் வெற்றிமாறன்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி விஜய் சேதுபதி,சூரி,கெளதம் மேனன்,ராஜீவ் மேனன், பவானி ஷ்ரி ஆகியவர்கள் நடித்தப் படம் விடுதலை.இந்தப் படத்தின் வழியாக நடிகர் சூரி முதல் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார்.

இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார். கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரைக்கு வந்த விடுதலைப் படம் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. 

கதாநாயகனாக நடித்த சூரியின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.இதனால் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். 


இந்த நிலையில், விடுதலை இரண்டாம் பாகத்தை நான் விரும்பும்படி எடுத்தால் படம் வெளியாக 4 வருஷம் ஆகும் என்று வெற்றிமாறன் சொல்லியுள்ளார். மேலும் அவர் சொல்லுகையில்,

விடுதலை இரண்டாம் பாகத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை மூடுபனியில் எடுக்க முயற்சித்ததால் தான் தாமதமானது. தொடர்ந்து 100 நாட்கள் முயற்சி செய்தோம்இ அப்படி படம் எடுத்தால் நான்கு வருடங்கள் ஆகும் என்பதை உணர்ந்தேன்.

எனவே சிஜியில் செயற்கையாக மூடுபனியை உருவாக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். விடுதலை 2 படத்தில் விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட ஒரே ஒரு பிளாஷ்பேக் பகுதி மட்டுமே எடுக்கவேண்டி உள்ளது. மற்ற பகுதிகள் கொண்ட காட்சிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. 

இந்த படத்தை முடித்த பிறகு தான் இயக்குநர் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பின் வேலையை தொடங்குவார் என மேலும் கூறப்பட்டுள்ளது.


 


Advertisement

Advertisement