• Feb 01 2023

"எனக்குப் பாதி, உனக்குப் பாதி வா எடுக்கலாம்".. இறுதியில் நடந்த டுவிஸ்ட்.. பணப்பெட்டியை எடுத்தது யார்.. வெளியானது ப்ரோமோ..!

Listen News!
Prema / 1 week ago
image

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5சீசன்களை வெற்றிகரமாக கடந்துவிட்ட நிலையில், தற்போது இதன் 6ஆவது சீசனானது 100 நாட்களை கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் யார் டைட்டிலை வெல்லப்போகின்றார் என்பதை அறிந்துகொள்ள பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

இதில் இறுதிப் போட்டியாளர்களாக விக்ரமன், அசீம், மைனா, கதிரவன், ஷிவின், அமுதவாணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் கடந்த சில நாட்களுக்கு முன் கதிரவன் 3 லட்சம் பணப்பையை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து மீண்டும் ஒருமுறை பிக்பாஸ் பல லட்சம் மதிப்பில் பணப்பெட்டி ஒன்றை வைத்திருந்தார். 


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய 3ஆவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் பணப் பெட்டியை யார் எடுப்பது என்பது குறித்து போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கின்றனர். அந்தவகையில் 12லட்சம் வந்ததும் "6எனக்கு 6உனக்கு வா எடுக்கலாம்" எனக் கூறி ஷிவின் அமுதவாணன் கையை பிடித்து இழுத்து செல்கின்றார்.

இறுதியில் அமுதவாணன் பணப்பெட்டிக்கு அருகில் சென்று நிற்கின்றார். இறுதியில் பணப்பெட்டியை யார் எடுத்தார்கள் என்பதை இன்றைய எபிசோட்டில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. 


Advertisement

Advertisement

Advertisement