யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருப்பதாக
நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் தனது அடுத்த பட
போஸ்டரை இன்று வெளியிட்டுள்ள நிலையில் அந்த படத்திற்கும் எனக்கும்
எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் அந்த படத்திற்கு நான்
இசையமைக்கவில்லை என்றும் யுவன் சங்கர் ராஜா அறிவித்திருப்பது பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் ஆர்கே சுரேஷ் எழுதி, இயக்கி நடிக்கப் போகும் திரைப்படம் ’தென் மாவட்டம்’. இந்த
படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா இன்று நடந்த
நிலையில் இந்த போஸ்டர் தற்போது
இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த
போஸ்டரில் இசை யுவன் சங்கர்
ராஜா என குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து யுவன்
சங்கர் ராஜா தனது சமூக
வலைதள பக்கத்தில் இது குறித்து விளக்கம்
அளித்துள்ளார்.
‘பத்திரிகை நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த
விரும்புகிறேன், நான் இந்த படத்தில்
பணியாற்றவில்லை, இந்த படத்தில் நான்
பணியாற்ற வேண்டும் என்று என்னை யாரும் அணுகவும் இல்லை’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ஒரு
இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்யாமலே போஸ்டரில் எப்படி அவரது பெயரை பயன்படுத்தலாம் என்று ஆர்கே சுரேஷ்க்கு கண்டங்கள் எழுந்து வருகிறது.
ஏற்கனவே ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்கே சுரேஷ் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் இது குறித்து விசாரணையும்
நடந்து வருகிறது. இந்த நிலையில் திடீரென
அவர் தனது அடுத்த படத்தின்
போஸ்டரில் யுவன் சங்கர் ராஜாவின் பெயரை அவரது அனுமதியின்றி பயன்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஆர்கே
சுரேஷ் என்ன விளக்கம் தரப்போகிறார்
என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
A clarification for Press, Media and Fans!
I have not been committed or approached by anyone for being the music director of the above film, "Then Mavattam". pic.twitter.com/oyDYMxGn1U
Listen News!