• May 18 2024

ப்ரீ புக்கிங்கில் லியோ திரைப்படம் பெற்ற வசூல் இத்தனை கோடியா?- வெளிநாட்டில் எத்தனை கோடி தெரியுமா?

stella / 7 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் அந்தப் படம் கண்டிப்பாக மெகா ஹிட்டாகும் என்று விஜய்யின் ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கின்றனர். 

இப்படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5ஆம் தேதி ரிலீஸானது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் எதிர்பார்த்ததைவிடவும் படம் ஸ்டைலிஷாகவும், ஆக்‌ஷனாகவும் வந்திருப்பது உறுதியாகியிருப்பதாக கொண்டாடுகின்றனர். அதேசமயம் ட்ரெய்லரில் விஜய் கெட்ட வார்த்தை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


அதேபோல் அளவுக்கதிகமான வன்முறை காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக ஒரு கருத்து எழுந்திருக்கிறது.தமிழகத்தில் முதல் காட்சியே காலை 9 மணிக்கு தான் தொடங்குகிறது, இது ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தியாக தான் உள்ளது. ஆனால் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணி ஷோ ஒளிபரப்பாக இருக்கிறது.

இதனால் தமிழக ரசிகர்கள் பக்கத்து மாநிலங்களுக்கு அதிகம் செல்கின்றனர் என தகவல் வருகின்றன.விஜய்யின் லியோ படம் ப்ரீ புக்கிங்கிலேயே அதிக கலெக்ஷனை பெற்று வருகிறது. அதன் முழுத் தகவலைப் பார்க்கலாம்.


தமிழ்நாடு- ரூ. 9 கோடி

கர்நாடகா- ரூ. 7 கோடி

கேரளா- ரூ. 6 கோடி

ஆந்திரா, தெலுங்கானா- ரூ. 2 கோடி

வெளிநாடு- ரூ. 40 கோடி என்றும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement