• May 18 2024

சமந்தாவின் சாகுந்தலம் படம் எப்படி இருக்கு? - வெளியான ட்விட்டர் விமர்சனம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் சாகுந்தலம் படத்திற்கான விமர்சனங்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. அனுஷ்கா நடிப்பில் உருவான ருத்ரம்மாதேவி படத்தை இயக்கிய குணசேகர் படத்தை இயக்கியிருக்கிறார். மையோசிடிஸ் நோயிலிருந்து மீண்ட பின்னர் சமந்தா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருந்தது.அத்தோடு  இன்று வெளியான படத்துக்கு ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. நாக சைதன்யாவுடனான பிரிவுக்கு பிறகு அவரது கேரியர் உச்சம் சென்றது. புஷ்பா படத்தில் பாடலுக்கு நடனம், ஹாலிவுட் படத்தில் கமிட்டானது என பரபரப்பாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த சமயத்தில்தான் அவருக்கு மையோசிடிஸ் எனும் தோல் நோய் வந்தது. எனினும் இதற்காக பல மாதங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் சமீபத்தில் சிகிச்சை முடிந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

 அந்த வகையில் சமந்தா நடித்திருக்கும் படம் சாகுந்தலம். ருத்ரம்மாதேவி படத்தின் இயக்குநர் குணசேகர் இயக்கியிருக்கும் இப்படத்தில் சமந்தா லீட் ரோலில் நடித்திருக்கிறார். அவருடன், தேவ் மோகன், மோகன் பாபு, அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

மணி ஷர்மா இசையமைப்பில் சேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இந்தத் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது.இப் படத்துக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனத்தை கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

இதோ அந்த ட்விட்டர் விமர்சனம்...









Advertisement

Advertisement