• Apr 26 2024

உதய் படம் எப்படி பண்ணியிருக்கார்?..வாக்கிங் நேரத்தில் அமைச்சரிடம் ஆர்வமாய் கேட்ட முதலமைச்சர்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத் தலைவன் படம் எப்படி இருக்கு என்று அமைச்சரிடம்  உதயநிதியின் அப்பாவான முதல்வர் முக ஸ்டாலின் ஆர்வத்துடன் கேட்டார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், கலையரசன், பிக் பாஸ் ஆரவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கலகத் தலைவன்.ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்திருக்கும், இப்படம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 18)ந் தேதி திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வசூலை பெற்று வருகின்றது.

ஒரு தொழிற்சாலை சொந்தமாக புதுவகை கனரக வாகனத்தை உற்பத்தி செய்ய திட்டமிடுகிறது. ஆனால், அந்த வாகனத்தின் மூலம் காற்று மாசுபாடு என்பதால், அரசின் அனுமதி கிடைப்பது கடினம் என்பதை தெரிந்து கொண்ட நிறுவனம், அந்த விஷயத்தை மறைத்து அரசிடம் அனுமதி வாங்க முயற்சிக்கிறது. அத்தோடு இந்த ரகசியம் வெளியில் தெரிந்தால் கனரக வாகன உற்பத்தி நிறுத்தப்பட்டு பல கோடி நஷ்டம் ஏற்படுகின்றது.



இதனால் கடுப்பான நிறுவனம், ரகசியத்தை வெளியில் கசிய விட்டது யார்? என்பதை கண்டுபிடிக்கும் வேலையை ஆரவிடம் கொடுக்கப்படுகிறது. உதயநிதி யார்? அவர் ஏன் இதையெல்லாம் செய்கிறார்? அவருக்குப் பின்னால் இருப்பது யார்? என்ற அடுக்கடுக்கான திருப்பங்களுடன் கலகத் தலைவன் படத்தின் கதை செல்கிறது. நேர்த்தியான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் உதயநிதி அட்டகாசமாக நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

இவ்வாறுஇருக்கையில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போது, தன்னுடன் இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் கலகத் தலைவன் படம் எப்படி இருக்கிறது என்று ஆர்வத்துடன் கேட்டார். எனினும் அதற்கு, அமைச்சர் படம் ரொம்ப நல்லா இருக்கு, பொதுவாக பாட்டு வரும் போது பலர் எழுந்து போவாங்க, அப்படி இல்லாமல் அனைவரும் படத்தை பார்த்து ரசித்தனர் என்றார். அமைச்சரிடம் கலகத் தலைவன் படம் பற்றி முதலமைச்சர் விமர்சனம் கேட்ட வீடியோ சமூகவலைத்தளத்தில்  டிராண்டாகி வருகின்றது.

அத்தோடு கழகத் தலைவன் படம் வெளியீட்டுக்கு முன்பே தமிழக முதல்வர் முகஸ்டாலின், தனது மனைவி துர்காவுடன் சிறப்பு காட்சியை பார்த்தார். மேலும் இப் படத்தை பார்த்து படம், அருமையாக இருப்பதாகவும், சமூக அக்கறையோடு நேர்த்தியான படைப்பை கொடுத்திருப்பதாகவும் படம் வெற்றிபெற படக்குழுவினரை வாழ்த்துவதாகவும் தெரிவித்து இருந்தார்.


Advertisement

Advertisement

Advertisement