• May 19 2024

ஷோவில் வைத்து லவ் லெட்டர் கொடுத்த நபர்... வெட்கப்பட்ட பிரியங்கா... வெளியான வீடியோ இதோ..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றன. அதுமட்டுமல்லாது இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் 'ஸ்டார்ட் மியூசிக்'.


இந்நிகழ்ச்சியானது 3சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியினை தொகுப்பாளினி பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகின்றார்.


இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஒரு சுவாரஷ்ய சம்பவம் குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் பிரியங்கா "ஏற்கெனவே 3ஜோடிகள், நான்காவதாக ஒரு புது ஜோடி, எல்லாருமே அவங்க அவங்க ஜோடிக்கு லவ் லெட்டர் கொடுக்கணும்" எனக் கூறி வெட்கப்படுகின்றார்.


இதனையடுத்து ஒரு நபர் எழுந்து பிரியங்காவிற்கு எழுதிய லவ் லெட்டரை வாசிக்கின்றார். அதில் "நான் ஒரு பொறுக்கி, நீ என் மனசைக் கெடுத்த சிறுக்கி" எனக் கூறுகின்றார். இதனையடுத்து பிரியங்கா வெட்கப்படுகின்றார். பின்னர் அந்த நபருடன் இணைந்து ரொமாண்டிக் டான்ஸ் ஒன்றினையும் ஆடுகின்றார். 

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement