விஷால் நடிப்பில் மதகஜராஜா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் மாஸ் காட்டி வருகின்றது. இந்த படத்தில் விஷால் மற்றும் சந்தானத்தின் காமெடி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.
இந்த நிலையில், அஜித்குமார் மற்றும் ஷோபனா பத்ம விருதை வென்றதுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த விஷால், இளையராஜா பற்றி தர குறைவாக பேசியிருக்கும் இயக்குநர் மிஷ்கினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தற்போது அவர் வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது.
அதன்படி அவர் கூறுகையில், மிஷ்கினுக்கு இதே வேலையா போய்ட்டு.. மேடை நாகரிகம் ஒன்று உள்ளது.. அதில் எப்படி பேச வேண்டும் என்று கூட தெரியவில்லையா?
இளையராஜா கடவுளின் குழந்தை போன்றவர். அவர் நிறைய பேரின் தனிமையை தனது இசை மூலம் தகர்த்து எறிந்தவர். அவரை தரக்குறைவாக பேசியது மன்னிக்க முடியாதது. அவர் பேசிவிட்டு மன்னிப்பு கேட்டதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
மேலும் அஜித் மற்றும் ஷோபனாவுக்கு பத்ம விருதுகள் கிடைத்துள்ள நிலையில் அவர்களுக்கு வாழ்த்து கடிதங்களை அனுப்புவதற்காகத்தான் நான் நடிகர் சங்கத்திற்கு வந்ததாக தெரிவித்துள்ளார். இதன் போதே அவர் மிஷ்கின் பற்றி கோபமாக பேசியுள்ளார்.
ஏற்கனவே துப்பறிவாளன் 2 படத்தின் போது மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனாலேயே அந்த படம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மிஷ்கினின் தரக்குறைவான பேச்சுக்கு விஷால் பதிலடி கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!