• Dec 05 2022

பிக்பாஸ் ஆரவ்வின் மகனைப் பார்த்திருக்கின்றீர்களா?- அடடே இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரே

Listen News!
stella / 1 week ago
image
Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களில் ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் சீசன் 1 இல் போட்டியாளராக கலந்து கொண்டது மட்டுமல்லாது டைட்டில் வின்னராகவும் தெரிவு செய்யப்பட்டவர் தான் ஆரவ்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதன்படி மார்க்கெட் ராஜா என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இருப்பினும் அப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.


ஆகையால் இதனைத் தொடர்ந்து நெக்கட்டிவ் ரோலில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் அண்மையில் உதயநிதி நடிப்பில் வெளியான கலகத் தலைவன் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் ஆரவ் தனது மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இதற்கு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.