• May 19 2024

அமீர்கான் படத்தைத் தொடர்ந்து ஷாருகான் படத்திற்கு எதிராகவும் எழும் ஹேஷ்டேக்குகள்- கடும் அதிர்ச்சியில் படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!


பாலிவூட் அமீர் கானின் நடிப்பில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் தான் லால் சிங் சத்தா.ஆனால் இப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்று வருவதோடு இப்படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல எதிர்ப்பு கிளம்பி வருவதையும் காணலாம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அமீர்கான் “இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது” என்று கூறியதை அடுத்து அவர் தேசபக்தி அற்றவர் எனக் கூறி “தற்போது லால்சிங் சத்தா படத்தைப் புறக்கணிப்போம்” என சிலர் ஹேஷ்டேக் உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர்.


 இதுபற்றி முன்பே பேசிய அமீர்கான் “நான் நமது நாட்டை நேசிக்கவில்லை என சிலர் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை. என் படத்தை புறக்கணிக்காமல் அனைவரும் பாருங்கள்” எனக் கூறியிருந்தார். ஆனால் படம் அடைந்த படுதோல்விக்கு இந்த ஹேஷ்டேக்குகளும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அமீர்கான் படத்தை அடுத்து ஷாரு கான் படமான பதான் திரைப்படத்துக்கு எதிராகவும் BoycattPathan என்ற ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டு வருகின்றன.இதனால் பதான் படக்குழு கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement