• May 19 2024

சுதந்திர தினத்தில் சூப்பரான சம்பவம் பண்ணிய 'ஜெயிலர்'... வசூலில் செய்த மாபெரும் சாதனை... கமலின் 'விக்ரம்' படத்தை முறியடித்து விட்டதா..?

Prema / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பல்வேறு சினிமா உலகில் இருந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தாலும், மிக முக்கிய கதாபாத்திரங்களில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படமானது பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி 6நாட்களைக் கடந்து விட்டாலும் இப்போது வரை ரசிகர்கள் கூட்டம்  தியேட்டர்களில் குவிந்த வண்ணம் தான் இருக்கின்றது. சன நெரிசலுக்கு ஏற்ப அமோக வசூல் வேட்டையையும் நடத்தி வருகின்றது.


மேலும் நேற்றைய தினம் இந்தியாவினுடைய சுதந்திர தினமாக இருந்தாலும் நேற்றைய தினமும் ரசிகர்கள் கூட்டம் அலை மோதி இருந்தது. அந்தவகையில் இப்படம் வெளியாகி தற்போது 6நாட்களைக் கடந்துவிட்ட நிலையில் தற்போது அதன் வசூல் விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது.


அதாவது இதுவரை உலகளவில் ரூ. 395 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்திருக்கின்றது. இவ்வாறாக ரூ. 400 கோடியை நெருங்கியுள்ள ஜெயிலர் வசூல், விரைவில் கமல் நடித்த விக்ரம் படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் முறியடித்து விடும் எனப் பலரும் கூறி வருகின்றனர். 

இவ்வாறாக ஜெயிலர் படம் அமோக வசூல் வேட்டையினை நிகழ்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement