• Apr 27 2024

தளபதி 67 திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமை இத்தனை கோடிக்கு விற்பனையா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்துஅடுத்ததாக தனது 67-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இரண்டு நாட்களாக  தளபதி 67 படத்தின் தயாரிப்பு நிறுவனம் வரிசையாக இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அறிவிப்பில் வந்த அனைத்து நடிகர்கள் நடிகையும் பார்த்தால்  படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது என்றே சொல்லலாம்.

நேற்று  இப்படத்தில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் நடிகை திரிஷா நடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படம் குறித்த தற்போதைய தகவலின் படி, தளபதி 67 படத்தின் ஆடியோ உரிமம்  சோனி மியூசிக் நிறுவனத்திற்கு அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது .அதாவது குறித்த நிறுவனம்  ரூ.16 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் கசிந்து வருகிறது.

அந்த வகையில், சோனி மியூசிக் அனிருத்தின் அனைத்து படங்களின் ஆடியோ உரிமையை வாங்க விருப்பம் கொண்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு, அனிருத் இசையமைத்த விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் வாங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்  எவ்வளவு விலை கொடுத்தது என்ற தகவல் வெளியாகவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது,


Advertisement

Advertisement

Advertisement