• May 19 2024

கடின உழைப்பும், விடா முயற்சியும் ஒருபோதும் தோல்வியடையாது- தம்பியுடன் பேசாமல் இருந்தாலும் வாழ்த்து கூறிய வனிதா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அருண் விஜய். இவரது நடிப்பில் இன்றைய தினம் 1500க்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிய திரைப்படம் தான் 'யானை'. இப்படத்தை சிங்கம் பட வெற்றி இயக்குநர் ஹரி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளதோடு பிரகாஷ் ராஜ், ராதிகா, யோகிபாபு, இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சகோதர உறவு தாய் என பல சென்டிமென்டை வைத்து உருவதகிய இந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அத்தோடு இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கிராமத்து கதையை மையமாக வைத்து ஹரிக்கே உரித்தான ஆக்ஷன் பாணியில் வெளியான இப்படத்தில் அனைவரும் தமது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்திற்கு அருண் விஜய்யின் அக்கா வனிதா விஜயகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “கடின உழைப்பும், விடா முயற்சியும் ஒருபோதும் தோல்வியடையாது எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். பல வருடங்களாக அருண் விஜய்யும், அவரது அக்கா வனிதாவுக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது வனிதா வாழ்த்து தெரிவித்துள்ளது பலரையும் வியப்படைய வைத்துள்ளது. இதில் சிலர் படத்தை இயக்கிய ஹரி, வனிதாவின் தங்கை கணவர் என்பதால் அவர் வாழ்த்து தெரிவித்திருக்கலாம் எனவும் கூறி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement