• Apr 17 2026

பாக்கியா முன்னாடி கை கட்டி பணிந்து நிற்கும் கோபி, சீரியலில் அடுத்து நிகழப்போவது இது தானா?- இந்த டுவிஸ்டை எதிர்பார்க்கலையே

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது யாரும் எதிர்பாராத விதமாக விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

சீரியலின் கதைப் படி கோபி மீண்டும் ராதிகா உடன் பாக்யாவின் வீட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். ராதிகா பாக்கியாவுடன் சண்டை போடாமல் பாக்கியாவுக்கு ஆதரவாக இருப்பது தான் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


தற்பொழுது செழியன்-ஜெனி, எழில்-அமிர்தா திருமண வாழ்க்கையில் பெரிய சிக்கல்கள் வந்திருக்கிறது. இதனால் கதை தற்போது பரபரப்பாக நகர தொடங்கி இருக்கிறது.இந்நிலையில் தற்போது பாக்யா சேரில் அமர்ந்திருக்க, அவருக்கு பின்னால் கோபி வேலைக்காரன் போல துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு கைகட்டி நிற்கும் போட்டோக்கள் வெளியாகி இருக்கிறது.


கோபியாக நடித்து வரும் சதீஷ் தான் அந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அடுத்து சீரியலில் இப்படி காட்சிகள் வருகிறதா என ரசிகர்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர். ஆனால் இது ஷுட்டிங்கில் ப்ரீயாக இருந்த போது எடுத்த புகைப்படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement