• May 19 2024

ஓய்வெடுக்கவுள்ளதை அறிவித்த கோபி... அப்போ பாக்கியலட்சுமி சீரியலின் நிலை..? ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும், கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும் நடித்து வருகின்றனர்.


அந்தவகையில் இந்த சீரியலில் மிகப்பெரிய தூணாக விளங்கி வருபவர் கோபி தான். இதற்கு முன்னர் இவர் பல்வேறு சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு பெயரையும் புகழையும் சேர்த்தது 'பாக்கியலட்சுமி' சீரியலில் இவர் நடித்த கோபி கதாபாத்திரம் தான்.


இவர் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ வெளியிட்டு வருவார். இந்நிலையில் தற்போது அவர் தலைக்கு கை கொடுத்தவாறு படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு அதற்கு மேலே "ஒரு வாரம் ஓய்வு விடுமுறை. பரீட்சை முடித்துவிட்டு summer holiday என்ஜாய் பண்ணுவது போன்று இருக்கிறது" பதிவிட்டுள்ளார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் "நீங்கள் ஒருவாரம் ஓய்வில் இருந்தால் பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் என்ன ஆகிறது?" என கேட்டு வருகின்றனர்.  

Advertisement

Advertisement