விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் ’தளபதி 69’ படத்தின் இயக்குனர் யார் என்பதை இதுவரை முடிவு செய்யாத நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பட்டியலில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபல இயக்குனர்கள் இடம் பெற்றிருந்தார்கள் என்பதை பார்த்தோம்.
இருப்பினும் ’தளபதி 69’ படத்தின் இயக்குனர் யார் என்பதை தேர்வு செய்வதில் விஜய் குழப்பத்தில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஒரு வழியாக இயக்குனரை லாக் செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ’தளபதி 69’ படத்தை இயக்க இருப்பது எச் வினோத் என்று முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இது குறித்து தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அரசியலுக்கு முந்தைய தனது கடைசி படம் என்பதால் இந்த படத்தின் கதை ஒரு அரசியல் கதை அம்சமாக இருக்க வேண்டும் என்று விஜய் விரும்பிய நிலையில் எச் வினோத் கூறிய கதைதான் தனது கடைசி படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து ‘தளபதி 69’ படத்தின் பட வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று எச் வினோத்திற்கு விஜய் அனுமதி அளித்து விட்டதாகவும் இதனை அடுத்து எச் வினோத் சுறுசுறுப்பாகி வருவதாகவும் கூறப்படுகிறது. அஜித்தை வைத்து தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கிய எச் வினோத் தற்போது விஜய் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்த உள்ள நிலையில் அந்த வாய்ப்பையும் அவர் சரியாக பயன்படுத்த கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசன் படத்தை இயக்கப் போவதாக ஒரு ஆண்டுக்கு மேலாக அவர் காத்திருந்த நிலையில் தற்போது அவருக்கு விஜய் படம் கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!