பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.
அதில், பாக்கியா வீட்டுக்கு வந்த பெண்ணொருவர் ராதிகா வீட்டை காலி பண்ணுவதாக பாக்கியாவிடம் சொல்லுகிறார். இதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். மேலும் ராதிகாவை பார்க்க உடனே செல்லுகிறார்.
இதன் போது ராதிகா மொத்தமாக வீட்டை காலி பண்ணி போவதற்கு ரெடி ஆகிறார். அப்போது ராதிகா வீட்டுக்கு போன பாக்கியா அவருடன் மனம் விட்டு பேசுகிறார்.
இப்போ நீங்க எடுத்திருக்கிற முடிவு நூறு சதவீதம் சரி என்று தோன்றுதா? என பாக்கியா கேட்க, நான் எப்ப சரியான முடிவு எடுத்திருக்கின்றேன்.. நான்தான் சரியான முடிவே எடுப்பதில்லை என்று ராதிகா சொல்லுகின்றார்.
மேலும் கோபியை டிவோஸ் பண்ணின பிறகு ரொம்ப கஷ்டப்பட்டீர்களா பாக்கியா என ராதிகா கேட்க, இல்லை... அந்த டிவோஷால தான் நான் யாருனு கண்டு பிடிச்சன். என் வாழ்க்கை என்ன என்பதை கண்டு பிடிச்சேன் என்று பாக்கியா சொல்லுகிறார்.
ஆனா நான் என் கல்யாணத்துக்கு பிறகு தான் வாழ்க்கையையே தொலைச்சேன். நான் கல்யாணமே பண்ணி இருக்க கூடாது என சொல்லி செல்கிறார் ராதிகா. இது தான் தற்போது வெளியான புதிய ப்ரோமோ.
Listen News!