• May 01 2024

“கொண்டாடத் தயாராகுங்கள்” ரசிகர்களை குஷிப்படுத்திய மாவீரன் படத்தின் சூப்பர் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திற்குள் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'டான்' படம் பாக்ஸ் ஆபிசில் 100 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.இதனால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது அதிகமாகவே உள்ளது.

அந்த வகையில் இவர் தற்பொழுது 'மண்டேலா' படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் கூட்டணியில் 'மாவீரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இயக்குநர் மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோரும் 'மாவீரன்' படத்தில் நடித்து வருகின்றனர்.


இருப்பினும் படப்பிடிப்பில் இயக்குநருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சில காலம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என கூறப்பட்டது. இருப்பினும் இது வதந்தி என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.தற்போது 'மாவீரன்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


இந்நிலையில் 'மாவீரன்' படக்குழுவினர் புதிய போஸ்டருடன் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் என்ற வாசகத்துடன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அனேகமாக பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பாக தான் இது இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





































Advertisement

Advertisement

Advertisement