• Jun 04 2023

நடிகர் கார்த்திக்கின் முதல் மனைவியின் அழகிய புகைப்படம்- கௌதம் கார்த்திக் பகிர்ந்த போட்டோ..!

Jo / 2 weeks ago

Advertisement

Listen News!

பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்திக். சென்னை புதுக் கல்லூரியில் பி.ஏ. படித்த இவர் பாரதிராஜா மூலமாக நடிகராக களம் இறங்கினார்.

அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஹிட் கொடுத்த இவர் முக்கிய இயக்குனர்களான கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், பி.வாசு, சுந்தர்.சி, பிரியதர்ஷன், கே.வி.ஆனந்த், ஆர்.வி உதயகுமார், பாசில் போன்றோரின் படங்களில் நடித்துள்ளார்.

1988ம் ஆண்டு ராகினி என்பவரை திருமணம் செய்துகொண்ட கார்த்திக் மனைவியின் தங்கை ரதி என்பவரை 1992ம் ஆண்டு அவரையும் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர், அதில் கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி கலக்கி வருகிறார்.தற்போது அன்னையர் தின ஸ்பெஷலாக பிரபலங்கள் தங்களது அன்னையின் புகைப்படங்களை வெளியிட கௌதம் கார்த்திக் தனது அம்மாவின் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் உங்களின் அம்மா மிகவும் அழகாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement