• May 08 2024

சிம்பு பாடிய புல்லட் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கேபிரில்லா- அதுவும் இந்த பிக்பாஸ் பிரபலத்துடனா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் கேபிரில்லா. இவர் இதற்கு முதல் தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர்.

இதனைத் தொடர்ந்து பல நடன நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வந்தாலும் பிக்பாஸில் பங்கு பற்றியதன் மூலமே தனக்கென ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் 5 லட்சம் பண பெட்டி உடன் வெளியில் சென்று பரபரப்பை ஏற்படுத்தினர். அதற்காக அவரை அதிக பேர் பாராட்டினார்கள்.

இதனைத் தொடர்ந்து விஜய்டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஈரமான ரோஜாவே என்னும் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் கேபி தன்னுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆஜித்துடன் நடனமாடியுள்ளார்.

ராம் சரண், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் புல்லட் பாடலுக்கு இருவரும் நடனமாடியுள்ளனர். இந்த புல்லட் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த பாடலுக்கு இருவரும் நடனமாடியுள்ள வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement