• May 19 2024

பெண்கள் உடை அணிந்து சூப்பர் மாடலாக மாறிய ஜி.பி.முத்து -தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் பிரபலங்கள் தேர்வில் நிறைய மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றது. அப்படி கடந்த சீசனில் திருநங்கையில் ஒருவரை தேர்வு செய்து நிகழ்ச்சிக்குள் அனுப்பினார்கள்.

மேலும் இந்த முறை பொது மக்களில் ஒருவரை தேர்வு செய்து அனுப்பியுள்ளார்கள், அந்த லிஸ்டில் வந்தவர் தான் ஜி.பி. முத்து. 

டிக்டாக்கில் காமெடியாக வீடியோக்கள் பதிவிட அது செம வைரலாக மக்களிடமும் நன்கு பிரபலம் ஆகினார். அப்படியே வளர்ந்து யூடியூப் பக்கமும் திறந்து அதிலும் நிறைய வீடியோக்களை பதிவிட்ட வண்ணம் இருந்தார்.


இவ்வாறு இருக்கையில் இவரின் காமெடிக்கு என்று தனிரசிகர் பட்டாளமே உள்ளது.இப்போது பிக்பாஸில் நுழைந்து நிறைய கலாட்டாக்கள் செய்து வருகிறார். அவருக்கான ஆதரவு பெரிய அளவில் உள்ளது, எனவே அவர் நீண்டநாள் பிக்பாஸில் இருப்பார் என்ற எண்ணம் ரசிகர்களிடம் உள்ளது.

இந்நிலையில் இவர் வெளியில் செய்த சேட்டை வீடியோக்களை ரசிகர்கள் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றார்கள்.அந்தவகையில் பெண்கள் உடைகள் அணிந்து பெரும் அட்ராசிட்டி செய்துள்ளார்.இதோ அந்த வீடியோ...



Advertisement

Advertisement