தென்னிந்திய சினிமாவில் கறுப்பழகன் என ரசிகர்களால் செல்லமாக வர்ணிக்கப்படும் ஒருவரே நடிகர் விஷால். "கறுப்பான கையால என்னைப் புடிச்சு.." அந்தப் பாடல் வெளியான நாள் முதல் இன்றுவரை கறுப்பும் ஓர் அழகு தான் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கின்றார். சாதிப்பதற்கு அழகோ நிறமோ அவசியம் இல்லை திறமையும் கடின உழைப்பும் மட்டும் போதும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இன்றுவரை விளங்கி வருபவர் விஷால்.
'செல்லமே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி 'சண்டக்கோழி', 'திமிரு', 'அவன் இவன்', 'தாமிர பரணி', 'நான் சிகப்பு மனிதன்' என இவரது திரைப்பயணம் நீண்டு கொண்டே செல்கின்றது. இந்த நிலையில் இவர் தற்போது நடித்துள்ள படம் 'லத்தி'. இப்படத்தை இயக்குநர் வினோத்குமார் இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாது ராணா புராெடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா - நந்தா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த நிலையில் இப்படத்தினுடைய டீஸர் ஆனது சமீபத்தில் வெளியானது. இவ்வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்நிலையில் நிகழ்சித் தொகுப்பாளர் ஒருவர் 'லத்தி' படத்தினுடைய கதாநாயகனான விஷாலிடம் ஒரு சில கேள்விகள் கேட்டிருக்கின்றார். அதிலும் குறிப்பாக "யுவனிற்கும் உங்களிற்கும் இடையிலான ரிலேஷன்ஸிப் எப்படியானது?" என்பது போன்ற ஒரு கேள்வியினைக் கேட்டிருந்தார். இதற்கு விஷால் அளித்த பதில் ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பேசப்பட்டு வருகின்றது.
அதாவது "நாங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி மாதிரி" எனப் பதிலளித்திருக்கின்றார் நடிகர் விஷால். அதுமட்டுமன்றி மேலும் அவர் கூறுகையில் "'தாவணி போட்ட தீபாவளி…' பாடல் முதல் இன்றுவரை யுவன் சேருடனான தொடர்பு நீண்டு கொண்டே இருக்கின்றது. எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான ஒருவர் யுவன். என்னை பட்டிதொட்டி வரைக்கும் கொண்டு போய் விட்டதே யுவனோட பாடல்கள் தான். இன்னும் இன்னும் நிறையப் பாடல்கள் எனக்காக ஒதுக்கி வைச்சிருக்கார் என்று நினைக்கிறேன்" எனவும் யுவன் பற்றி புகழ்ந்து பேசியிருக்காரு நம்ம விஷால்.
பிற செய்திகள்
- பிரபல நடிகர் புற்றுநோயால் மரணம்…அதிர்ச்சியில் திரையுலகம்..!
- வைற் உடையில் தேவதையாய் ஜொலிக்கும் மாளவிகா…அடுத்த உலக அழகி இவங்க தான் போல…வைரலாகும் புகைப்படங்கள்..!
- தைப்பொங்கலுக்கு விஷ் பண்ணினால் சித்திரை வருஷத்திற்குத் தான் ரிப்ளே பண்ணுவான்…ஜெய் பற்றிய உண்மையைப் போட்டுடைத்த சிவா..!
- சிபியுடன் இணைந்து அதிகாலை 2 மணிக்கு ஆன்ட்ரியா செய்த செயல்…ஏம்மா வேற நேரமே கிடைக்கலயா..?
- பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் தனுஷ்…விவாகரத்துக்கு காரணம் இவரா?..வெளியாகிய புகைப்படங்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!