• Jan 19 2025

உள்ளாடை மட்டுமே அணிந்து பரதநாட்டிய நடனமா? கஸ்தூரி வெளியிட்ட வீடியோ..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

வெறும் உள்ளாடை மட்டும் அணிந்த ஒரு பெண் பரதநாட்டியம் நடனம் ஆடும் வீடியோவை நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளதை அடுத்து அந்த வீடியோவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவை பொறுத்தவரை பரதநாட்டிய கலை என்பது ஒரு தெய்வீகமான கலை என்பதும் பாரம்பரிய கலாச்சாரம் கொண்டது என்றும் கூறப்பட்டு வருகிறது. பரதநாட்டிய கலைஞர்களுக்கு மதிப்பு மரியாதையும் சமூகத்தில் உண்டு என்பதும் அவர்களுக்கு ஏராளமான விருதுகள் வழங்கி மாநில மத்திய அரசுகள் கௌரவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அந்த அளவுக்கு மரியாதையுடன் நடத்தப்படும் பரதநாட்டிய  நடனத்தை ஒரு பெண் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து ஜிம்மில் ஆடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவை நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்து மெட்ராஸ் மியூசிக் அகடமி இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து உள்ளாடை அணிந்து பரதநாட்டியம் ஆடிய அந்த பெண்ணுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் இதே நடன கலைஞர் மிக அற்புதமான சில நடனங்கள் ஆடிய வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement